பசுக்களைச் சரியாகப் பராமரிக்கவில்லை- அதிகாரிகள் பணியிடை நீக்கம் 

/files/detail1.png

பசுக்களைச் சரியாகப் பராமரிக்கவில்லை- அதிகாரிகள் பணியிடை நீக்கம் 

  • 0
  • 0

உத்தரப் பிரதேசத்தில் பசுக்களைப் பாதுகாக்கும் கோசாலைகளைச் சரியாகப் பராமரிக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியரைப் பதவியைவிட்டுத் தூக்கியிருக்கிறது உ.பி அரசு.

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யாநாத் தலைமையிலான பாஜக அரசு தலைமையேற்றதிலிருந்து, பசுக்களின் மீது தனிக்கவனம் செலுத்திவருகிறது பாஜக. சமீபத்தில்கூட உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த்சார் மாவட்டம், சினாய் கோட்வாலி சிங்ராவதி பகுதியில் பசு ஒன்று கொல்லப்பட்டதாகத் தகவல் பரவியதையடுத்து, இந்துத்துவ கும்பல் நடத்திய வெறியாட்டத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரும், இளைஞர் ஒருவரும் கொல்லப்பட்ட சம்பவமும், பசுவைப் பாதுகாக்கிறோம் என்கிற பெயரில் பள்ளியிலிருந்து மாணவர்களை அனுப்பிவிட்டு பசுவைப் பள்ளி மற்றும் சுகாதார கூடங்களில் வைத்துள்ள சம்பவமும் தகுந்த உதாரணங்கள்.

இந்நிலையில், யோகி ஆதித்யநாத் தலைமையில் கடந்த ஜனவரி 01ஆம் தேதி ரூ. 100 கோடி செலவில் மாநிலம் முழுவதும் கிராம பஞ்சாயத்துகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என அனைத்துப் பகுதிகளிலும் ‘பசு பாதுகாப்பு சாலைகளை’அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டு, ஒரு பசு பாதுகாப்பு சாலையில் ஆதரவற்ற 1,000 பசு மாடுகள் வரை பராமரிக்கும் வகையில் திட்டமிடப்பட்டது செயல்படுத்தப்பட்டது. இந்நிலையில், மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நிச்லால் தெஹ்ஸிலிலுள்ள மாதவலியா கோசாலையில் அதிகாரிகள் பசுக்களைக் கவனிப்பதில் அலட்சியம் காட்டுவதாக எழுந்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட ஆறு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்துள்ளது உபி அரசு.

 

Leave Comments

Comments (0)