வெப்பச்சலனம்: மழைக்கு வாய்ப்பு!

/files/detail1.png

வெப்பச்சலனம்: மழைக்கு வாய்ப்பு!

  • 0
  • 0

-வித்யா

வெப்பச்சலனம்: மழைக்கு வாய்ப்பு!

வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்ய   வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் தொடங்கியதிலிருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக  இருந்துவருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்லமுடியாத நிலை  ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெப்ப சலனம் காரணமாக உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்  எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், " குமரிக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் தென் தமிழகத்தில்  ஒரு சில இடங்களில் மழை பெய்தது.  தற்போது குமரிக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேற்கு திசையில் நகர்ந்து மாலத்தீவு மற்றும் லட்சதீவு பகுதிகளில் நிலவுகிறது. இதனால் பலத்த காற்று வீசுவதோடு, அடுத்த வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை,கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை வானம்  ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகமுள்ள நிலையில், தாக்கத்தைக் குறைக்க மக்கள்  மழையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.  

\r\n

Leave Comments

Comments (0)