மாணவி பாத்திமா லத்தீப்பின் மரணத்திற்கு நீதி கேட்க முற்பட்ட தோழர்கள் கைது

/files/detail1.png

மாணவி பாத்திமா லத்தீப்பின் மரணத்திற்கு நீதி கேட்க முற்பட்ட தோழர்கள் கைது

  • 0
  • 0

மாணவி பாத்திமா லத்தீப்பின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த முற்பட்ட மக்கள் இயக்கத் தோழர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை ஐஐடியில் சமூகவியல் துறையில் முதலாமாண்டு படித்து வந்தவர் முதுகலை மாணவி பாத்திமா லத்தீப். கேரள மாநிலம் கொள்ளத்தைச் சேர்ந்த இவர் கடந்த 9ஆம் தேதி ஐஐடியில் உள்ள பெண்கள் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.  தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் பாத்திமா தற்கொலை செய்துகொண்டார் என்று முதலில் செய்திகள் பரவிவந்தன. ஆனால் அது புரளி என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்தி உணர்த்துகிறது. பாத்திமா இறப்பதற்கு முன்னர் அவரின் செல்போனில் ஒரு செய்தியைப் பதிவு செய்துள்ளார். அதில், ”சென்னை ஐஐடி பேராசிரியர் சுதர்சன பத்மநாபன் உள்ளிட்ட மூன்று  பேர் தன்னை மத ரீதியாகத் துன்புறுத்தி மன உலைச்சல் ஏற்படுத்தினர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவிவரும் மத வெறுப்பின் காரணமாக தமது மகள் உயிரிழந்திருக்கிறாள் என பாத்திமாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகக் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் விசாரணை மேற்க்கொண்டுவருகிறார். 

இந்நிலையில் பாத்திமாவின் மரணத்திற்கு நீதிகேட்டு இன்று (நவம்பர் 29) ஈரோட்டைச் சேர்ந்த மக்கள் இயக்கத் தோழர்கள் போராட்டம் நடத்த காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் காவல்துறையினரோ அந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்தது மட்டுமல்லாமல் இன்று அதிகாலை 4.30 மணிக்குத் தோழர்கள் கணகுறிஞ்சி, நிலவன், பெரியசாமி ஆகிய மூன்று பேரைக் கைது செய்துள்ளனர். 

இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்து, ”மாணவி பாத்திமா லத்தீப்பின் நிர்ப்பந்த கொலைக் குற்றவாளிகளைக் கைது செய், கொலைக்கு நீதி கேட்ட தோழர்களை விடுதலை செய், சனநாயக குரல்களை ஒடுக்காதே” என்று தெரிவித்துவருகின்றனர்.

Leave Comments

Comments (0)