பாடப்பிரிவில் பகவத்கீதை சேர்க்கப்பட்டத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய தோழர்கள் கைது

/files/detail1.png

பாடப்பிரிவில் பகவத்கீதை சேர்க்கப்பட்டத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய தோழர்கள் கைது

  • 0
  • 0

பொறியியல் பாடப்பிரிவில் பகவத்கீதை சேர்க்கப்பட்டத்தைக் கண்டித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்ட 25க்கும் மேற்பட்ட தோழர்களைக் கைது செய்திருக்கிறது காவல்துறை.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கு தத்துவவியல் படிப்பில் பகவத்கீதை பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் அகில இந்தியத் தொழில்நுட்ப கவுன்சிலின் (AICTE) உத்தரவின் பேரில் பகவத்கீதை விருப்பப் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் 3-வது செமஸ்டரில் இந்தப் படிப்பு சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியுள்ளன. இதற்கு மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.  

அந்த வகையில் இன்று (செப்டம்பர் 30) காலை 11 மணியளவில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களில் 25 பேரைக் கைது செய்துள்ளனர்.

Leave Comments

Comments (0)