இந்த வருடமும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வோம்- தோழர் செல்வி

/files/detail1.png

இந்த வருடமும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வோம்- தோழர் செல்வி

  • 0
  • 0

இந்த வருடமும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மனிதி அமைப்பின் ஆதரவுடன் பெண்கள் செல்வார்கள் என்று அவ்வமைப்பினை சேர்ந்த தோழர் செல்வி தெரிவித்திருக்கிறார்.  

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயதிற்குக் குறைவான பெண் குழந்தைகளும், 50 வயதிற்கு  அதிகமான பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுவந்தனர். இதனை எதிர்த்து, சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளின் சார்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான  வழக்குகள் அனைத்தும் ஒன்றாக்கப்பட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப் நாரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய குழு விசாரித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லலாம் என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டனர். ஆனால் இதற்கு ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு ஐய்யபன் கோவிலுக்குள் பெண்களை நுழையவிடாமல் தடுத்தனர்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 22ஆம் தேதி சென்னையில் செயல்பட்டுவரும் மனிதி அமைப்பைச் சேர்ந்த 11 பெண்கள் சபரிமலைக்குச் செல்ல முற்பட்டபோது பம்பையில் அவர்களை இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தியதால் அவர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாமல் திரும்பி வந்தனர். இதனையடுத்து இன்று (நவம்பர் 08) செய்தியாளர்களைச் சந்தித்த மனிதி அமைப்பின் தோழர் செல்வி, “உச்சநீதிமன்ற உத்தரவின்படி தான் கடந்த ஆண்டு எங்களது அமைப்பினர் சபரிமலை சென்றோம். ஆனால் பம்பையில் வைத்து எங்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பிவிட்டனர். இந்த ஆண்டு மீண்டும் சபரிமலைக்குச் செல்ல தயாராக இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

Leave Comments

Comments (0)