குடியுரிமை சட்டத் திருத்தம்:  சென்னை சென்ட்ரலில் மாணவர் அமைப்பினர் போராட்டம்

/files/detail1.png

குடியுரிமை சட்டத் திருத்தம்:  சென்னை சென்ட்ரலில் மாணவர் அமைப்பினர் போராட்டம்

  • 0
  • 0

 

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் இன்று (டிசம்பர் 21) சென்னை சென்ட்ரலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் டிசம்பர் 09ஆம் தேதி இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார். பல கட்ட விவாதங்களுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்போடு குடியுரிமை சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. 

இச்சட்டத்தின் மூலம், ”ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத பிரச்னை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். அந்த மூன்று நாடுகளிலிருந்து வரும் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர்,  பார்சி, ஜெயின்ஸ், மற்றும் புத்த மதத்தினர் மட்டுமே இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். ஆனால் இந்த மசோதா இஸ்லாமியர்களுக்கும்,  ஈழத் தமிழர்களுக்கும் பொருந்தாது” என்று அறிவிக்கப்பட்டது.

இஸ்லாமியர்களையும், ஈழத்தமிழர்களையும் வதைக்கும் இந்த திட்டத்தினை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில் இதுவரை 10க்கும் மேற்பட்டோரைக் காவல்துறையினர் சுட்டுக் கொலை செய்திருக்கின்றனர். இதனை எதிர்த்தும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக்கோரியும் பல மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அந்தவகையில், இன்று (டிசம்பர் 21) மாணவர் அமைப்பினர், விவசாய அமைப்பினர், மாதர் சங்கத்தினர் என பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். ஆனால் அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்க அனுமதிக்கமாட்டோம் என்று அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பிவருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களைக் கைது செய்யும் வேலையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Leave Comments

Comments (0)