குடியுரிமை சட்டத் திருத்தச் சட்டம்: நிரம்பி வழிந்த வள்ளுவர்கோட்டம்

/files/detail1.png

குடியுரிமை சட்டத் திருத்தச் சட்டம்: நிரம்பி வழிந்த வள்ளுவர்கோட்டம்

  • 0
  • 0

கடந்த டிசம்பர் 09ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார். பல கட்ட விவாதங்களுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்போடு குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத பிரச்னை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். ஆனால் அந்த மூன்று நாடுகளிலிருந்து வரும் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர்,  பார்சி, ஜெயின்ஸ், மற்றும் புத்த மதத்தினர் மட்டுமே இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். இந்த மசோதா இஸ்லாமியர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் பொருந்தாது. இதனால்தான் இச்சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று எதிர்கட்சி தலைவர்களும், இயக்கங்களும், மாணவர்களும், பொது மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரமாக நடந்துவருகிறது. மக்களை மத ரீதியாக பிளவுபடுத்த நினைக்கும் இந்த திட்டத்திற்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் மக்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

alt text

இந்நிலையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக நேற்று (டிசம்பர் 19) மாலை 3 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட இயக்கங்கள், மாணவர்கள், திரைக்கலைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக சிந்தனை கொண்டோர் என 3,000க்கும் மேற்பட்டோருடன் நிரம்பி வழிந்தது வள்ளுவர் கோட்டம்.

alt text

 

 தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் கூட்டத்தில் மாணவர்களின் கோஷங்கள் ஒலித்தது.

இதில் கலந்துகொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், “குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்குப் பின்னால் NRC இருக்கிறது.  NRC-தான் பயங்கரமானது. யார் இங்குக் குடியுரிமை பெற்றவர்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஒன்று அது. அசாமில் ஒரு சோதனையாக மேற்கொள்ளப்பட்டது.  அதில் 19 லட்சம் பேர் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று கண்டறியப்பட்டது. அந்த 19 லட்சம் பேரில் 12 லட்சம் பேர் இந்துக்கள். அப்படியென்றால் இந்த சட்டத்தின் படி சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்குக் குடியுரிமை வழங்கக்கூடாது என்றுதானே இருந்திருக்கவேண்டும். ஆனால் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பெளத்தர்கள், பார்சிகள் மட்டும் குடியுரிமை பெறலாம் என்று மாற்றி எழுதிக்கொண்டார்கள். மதத்தின் பெயரால் மக்களை அடையாளப்படுத்துகிறார்கள். குடியேறிய அனைவருக்கும் குடியுரிமை வழங்கமுடியாது என்பது சரி, சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்குக் குடியுரிமை வழங்க முடியாது என்பதும் சரி, பயங்கரவாதிகள் ஊடுருவியிருந்தால் அவர்களுக்கும் குடியுரிமை வழங்கமுடியாது என்பதும் சரி. அதை யாரும் அதை எதிர்க்கவில்லை.

alt text

ஆனால் மதத்தை அடிப்படையாகவும், அளவுகோலாகவும் ஒரு சட்டத்தை இயற்றுவது என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது. அரசியலமைப்பு சட்டத்தின் உயிர்நிலை மதச்சார்பின்மை.  அரசு எந்த மதத்தையும் சார்ந்திருக்கக் கூடாது என்று அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. ஆனால் மோடி அரசு வெளிப்படையாக இஸ்லாமிய வெறுப்பை விதைக்கிறது. மோடி அமித்ஷா உள்ளிட்ட இந்த சங்பரிவார் கும்பல் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யும் வரை நமது அறப்போர் நீடிக்கவேண்டும்” என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நடிகர் சித்தார்த், பாடகர் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட 600 பேர் மீது போராட்டதில் கலந்துகொண்டதற்காக இரு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave Comments

Comments (0)