குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: சட்ட நகல் கிழிக்கும் ஆர்ப்பாட்டம்

/files/detail1.png

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: சட்ட நகல் கிழிக்கும் ஆர்ப்பாட்டம்

  • 0
  • 0

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியிருக்கும் பாசிச பாஜக அரசைக் கண்டித்து இன்று (டிசம்பர் 12) சென்னையில் சட்ட நகல் கிழிக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

நாடாளுமன்றத்தில் டிசம்பர் 09ஆம் தேதி இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார். பல கட்ட விவாதங்களுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்போடு குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இச்சட்டத்தின் மூலம், ”ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத பிரச்னை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். அந்த மூன்று நாடுகளிலிருந்து வரும் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர்,  பார்சி, ஜெயின்ஸ், மற்றும் புத்த மதத்தினர் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். ஆனால் இந்த மசோதா இஸ்லாமியர்களுக்குப் பொருந்தாது” என்று அறிவிக்கப்பட்டது.

இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதா இந்திய மக்களை மத, இன அடிப்படையில் பாகுபடுத்துகிறது. இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் பேசிவருகின்றனர். 

இந்நிலையில், மத, இன பாகுபாட்டோடு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியிருக்கும் பாசிச பாஜக அரசைக் கண்டித்து இன்று மாலை 4 மணிக்குச் சென்னை மவுண்ட் ரோடு தர்கா அருகில் சட்ட நகல் கிழிக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த தோழர் கு. ராமகிருஷ்ணன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

Leave Comments

Comments (0)