இடியுடன் கூடிய மழை: வானிலை மையம்

/files/detail1.png

இடியுடன் கூடிய மழை: வானிலை மையம்

  • 0
  • 0

-வித்யா 

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யப் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக, மக்கள் வெளியில் செல்லமுடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகத் தமிழகத்தின் உள் மாவட்டங்களின் சில இடங்களில் மழை பெய்துவருகிறது.

இன்று (ஜூன் 06) சென்னையில் சேப்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், OMR சாலை, அம்பத்தூர், பூவிருந்தவல்லி, காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை, மாங்காடு, மெரினா, வடபழனி, பூவிருந்தவல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் தீடிரென மழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி பரவியதால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்துவருவதை நெட்டிசன்கள் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் chennaiRains என்ற ஹாஷ்டேக் பயன்படுத்திப் பதிவு செய்து வருகின்றனர். இதனால் மழை பெய்ய தொடங்கிய சில நேரத்திலேயே ChennaiRains என்கிற ஹாஷ்டேக் டிவிட்டரின் இந்திய ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுவிட்டது.

இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வேலூர், திருவண்ணாமலை,நீலகிரி, திருப்பூர், கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் இடி மற்றும் சூறைக்காற்றுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

\r\n

Leave Comments

Comments (0)