சென்னை: இன்று மாலையும் மழை பெய்யும்!

/files/detail1.png

சென்னை: இன்று மாலையும் மழை பெய்யும்!

  • 0
  • 0

-வித்யா 

வெப்பச்சலனம் காரணமாக நேற்று போல், இன்று மாலையும் சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அவ்வப்போது மழை பெய்துவந்தாலும், சென்னைக்கு மட்டும் மழை பெய்யவே இல்லை. பக்கத்தில் இருக்கிற காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்த நிலையில் சென்னையில் மழை இல்லாததால் வெயில் கொளுத்தியது. எப்போதுதான் சென்னையில் மழை பெய்யும் என மக்கள் காத்திருந்த நிலையில், நேற்று மாலை தீடிரென சென்னையின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்ததோடு சமூக வலைத்தளங்களிலும் சென்னையில் மழை chennaiRains என்ற ஹாஷ்டேக் பயன்படுத்திப் பதிவு செய்து வந்தனர். இதில் ChennaiRains என்கிற ஹாஷ்டேக் டிவிட்டரின் இந்திய ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது.

இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக நேற்றைப் போல் இன்று மாலையும் சென்னையின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை சென்னையில் நுங்கம்பாக்கத்திலும், மீனம்பாக்கத்திலும் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வெப்பசலனம் காரணமாக இந்த மழை பெய்ததாகவும்,  இன்று பிற்பகலிலும் இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

\r\n

Leave Comments

Comments (0)