தலித் மக்கள் அமர்ந்ததற்காகப் பேருந்து நிலையத்தை உடைத்தெறிந்த சாதி வெறியர்கள் 

/files/detail1.png

தலித் மக்கள் அமர்ந்ததற்காகப் பேருந்து நிலையத்தை உடைத்தெறிந்த சாதி வெறியர்கள் 

  • 0
  • 0

 

பேருந்து நிலைய நிழற்குடையில் தலித் மக்கள் அமர்ந்தார்கள் என்பதற்காக அந்த நிழற்குடையை உடைத்தெறிந்த சாதி வெறியர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது தெம்மாவூர். இந்த ஊரில் இருக்கும் பேருந்து நிலையத்தில் உள்ள நிழற்குடையில், தலித் மக்கள் அமர்கிறார்கள் என்பதற்காக ஆணவ சாதியினர் அந்த  நிழற்குடையை அடிக்கடி உடைத்து சேதபடுத்திவந்தனர். இந்நிலையில் இந்த தகவல் அறிந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர்கள் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி இந்த தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆணவ சாதியினரால் சேதப்படுத்தப்பட்ட நிழற்குடை சீர்செய்யப்பட்டது.

இந்நிலையில் சரிசெய்யப்பட்ட நிழற்குடையை நேற்று (அக்டோபர் 01) சாதி வெறியர்கள் மீண்டும் சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டு உள்ளனர். இதனையடுத்து எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பேருந்து நிலையத்தை உடைத்து சேதப்படுத்திய கயவர்களைக் கிராமத்திலிருந்து வெளியேற்றி அவர்களைத் தனிமைப் படுத்தவேண்டும் என்று அந்த பேருந்து நிலையத்தை மீண்டும் சீர்படுத்த வேண்டும் என்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

Leave Comments

Comments (0)