சாதி மறுப்பு திருமணம்: தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திக் குடியிருப்பை நாசம் செய்த ஆணவ சாதியினர்

/files/detail1.png

சாதி மறுப்பு திருமணம்: தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திக் குடியிருப்பை நாசம் செய்த ஆணவ சாதியினர்

  • 0
  • 0

 

ஆந்திராவில், சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இணையர் மீதும், தலித் சமூகத்தைச் சேர்ந்த அவர்களது உறவினர்கள் மீதும் பெண்ணின் வீட்டைச் சேர்ந்த ஆணவ சாதியினர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் நடந்திருக்கிறது.

ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், யெர்பேடு மண்டல் பகுதியைச் சேர்ந்த மகேஷும், அதே பகுதியைச் சேர்த்த சிநேகாவும் காதலித்து வந்துள்ளனர். மகேஷ் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். சினேகா யாதவ் சாதியைச் சேர்ந்தவர். இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் சிநேகாவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சூலூர்பேட்டாவிற்கு சென்று திருமணம் செய்துகொண்டனர். இந்த தகவல் அறிந்த சிநேகாவின் பெற்றோர் இணையரை ஆணவக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதில் அச்சமடைந்த இணையர் திருப்பதி நகர எஸ்.பி. அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டுத் தஞ்சமடைந்தனர். காவல்துறையினரும் பாதுகாப்பு தருவதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் இணையர் வீட்டிற்குச் சென்றனர். 

alt text

இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 040 சிநேகாவின் உறவினர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் அரிவாள், கத்தி, அமில பாட்டில்கள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் தலித் காலணிக்கு வந்து  மகேஷ், சினேகா, அந்த பகுதியில் வசிக்கும் தலித் மக்கள் மீது ஈவு இரக்கமின்றி சுமார் 45 நிமிடம் தாக்குதல் நடத்தியுள்ளனர். தலித் பெண்களின் முடியை இழுத்து கீழே தள்ளி அவர்கள் குடியிருப்பை நாசம் செய்து வன்முறையில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவில்லை. 

இதனை தொடர்ந்து தற்போது, எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சிநேகாவின் உறவினர்கள் 14 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலித் செயற்ப்பாட்டளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பிறகுதான் இந்த வழக்கையும் பதிவு செய்திருக்கின்றனர் காவல்துறையினர். ஆனால் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

Leave Comments

Comments (0)