தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மீது ஆணவ சாதியினர் கொடூர தாக்குதல்

/files/detail1.png

தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மீது ஆணவ சாதியினர் கொடூர தாக்குதல்

  • 0
  • 0

குஜராத் மாநிலத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உணவகத்தில் சாப்பிடும்போது உணவை இரைத்ததாக ஆணவ சாதியினரால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தின் சபர்மதி பகுதியில் உள்ள உணவகத்திற்குத் தலித் சமூகத்தைச் சேர்ந்த பிரக்னேஷ் பர்மர் (30) என்பவர் இரவு உணவு சாப்பிடுவதற்காகச் சென்றுள்ளார். அங்கு அவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது உணவு இரைந்துள்ளது. இதனால் கோபமடைந்த அந்த உணவகத்தின் உரிமையாளர் மகேஷ் தாகூர், ஜோகி தாகூர் உட்பட நான்கு பேர் பிரக்னேஷ் பர்மரை ரத்தம் வடிய வடியக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்ததையடுத்து இச்சம்பவம் வெளியில் தெரிய ஆரம்பித்தது.

alt text

இந்த சம்பவம் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்படவில்லை எனில் ”தலித் பந்த்” என்ற பெயரில் மிகப் பெரிய போராட்டம் நடைபெறும் என்று குஜராத் சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி தெரிவித்திருந்தார்.

தற்போது பிரக்னேஷ் பர்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மகேஷ் தாகூர் உட்பட நான் பேர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது மகேஷ் தாகூரை மட்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். மற்ற மூவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

Leave Comments

Comments (0)