ஈழத்தமிழர் அல்லாத பிற இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்குவதன் மூலம் பாஜகவே ''தமிழன் இந்து அல்ல'' என்கிறது

/files/detail1.png

ஈழத்தமிழர் அல்லாத பிற இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்குவதன் மூலம் பாஜகவே ''தமிழன் இந்து அல்ல'' என்கிறது

  • 1
  • 0

தமிழன் இந்து அல்ல, வள்ளுவ நெறியைச் சார்ந்தவன் என்றபோது கதறிய பாஜக கும்பல் தமிழர்களை 'இந்து' பட்டியலில் சேர்க்காமல் நழுவியிருக்கிறது என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் (டிசம்பர் 09) இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார். பல கட்ட விவாதங்களுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்போடு குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமல்படுத்தப்பட்டது.

இச்சட்டத்தின் மூலம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத பிரச்னை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். அந்த மூன்று நாடுகளிலிருந்து வரும் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர்,  பார்சி, ஜெயின்ஸ், மற்றும் புத்த மதத்தினர் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். ஆனால் இந்த மசோதா இஸ்லாமியர்களுக்குப் பொருந்தாது.  

இதனால் இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதா இந்திய மக்களை மத, இன அடிப்படையில் பாகுபடுத்துகிறது. இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் பேசிவருகின்றனர். 

இதுகுறித்து திருமுருகன் காந்தி, “குடியுரிமை சட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த ஈழத்தமிழர் அல்லாத பிற இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்குவதன் மூலம் பாஜகவே 'தமிழன் இந்து அல்ல' என்கிறது. தமிழன் இந்து அல்ல, வள்ளுவ நெறியைச் சார்ந்தவன் என்றபோது கதறிய பாஜக கும்பல் தமிழர்களை 'இந்து' பட்டியலில் சேர்க்காமல் நழுவியிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். 
 

Leave Comments

Comments (0)