தமிழர்களின் நெறி நூலை இந்துத்துவ நூலாகக் காட்டுகிற வேலையை பாஜக செய்துவருகிறது- திருமுருகன் காந்தி

/files/detail1.png

தமிழர்களின் நெறி நூலை இந்துத்துவ நூலாகக் காட்டுகிற வேலையை பாஜக செய்துவருகிறது- திருமுருகன் காந்தி

  • 0
  • 0

தமிழர்களின் நெறி நூலை இந்துத்துவ நூலாகக் காட்டுகிற வேலையை பாஜக செய்துவருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.

”தமிழ் நாட்டில் தொடர்ச்சியாக வன்முறை அரசியலை வளர்த்தெடுக்கவேண்டும் என்று பாஜக முயன்றுவருகிறது. திருக்குறள் தமிழர்களின் சொத்து. அது தமிழர்கள் உலக மக்களுக்காகப் படைத்த வாழ்வியல் நெறி. தமிழர்களின் நெறி நூலை இந்துத்துவ நூலாகக் காட்டுகிற வேலையை பாஜக செய்துவருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

திருக்குறள் என்னும் நெறி நூலில் அனைத்து உயிர்களும் சமமானவை என்கிற உயர்ந்த கொள்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது.  அனைத்து உயிர்களும் சமம் என்று சொல்லக்கூடிய கருத்துகள் இந்துத்துவ மத நூல்களில் கிடையாது. அவர்கள் மனிதர்களை மக்களாகப் பிரித்தார்கள். திருக்குறள் உழைப்பு, இயற்கை, மனித நேயத்தைப் போற்றுகிறது.

திருவள்ளுவர் சிலையை அவமதிப்பதுபோல ஆரோக்கியமற்ற வன்முறை அரசியலைத் தமிழ்நாட்டில் வளர்த்தெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். வன்முறையான நேர்மையற்ற பொய்களை மட்டும் நம்புகின்ற ஒரு கட்சியைத் தமிழர்கள் புறக்கணிப்பார்கள். ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

தமிழ் மொழிக்கான உரிமை மறுக்கப்படுகிறது. அனைத்து இடங்களிலும் இந்திக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது. மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் இந்தியில்தான் பெயர் வைக்கப்படுகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

Leave Comments

Comments (0)