உத்தரபிரதேசத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் மீது தாக்குதல்

/files/detail1.png

உத்தரபிரதேசத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் மீது தாக்குதல்

  • 0
  • 0

உத்தரப்பிரதேச மாநிலத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞனை தட்டிக்கேட்டதற்காக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையும், சகோதரனும் தாக்கப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர் நகர் மாவட்டம், போகர்ஹெடி கிராமத்தில் நேற்று (அக்டோபர் 29) தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுமி (17) ஒருவர் தண்ணீர் எடுப்பதற்காக கைபம்பு இருக்கும் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் அந்த சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்து தப்பித்துச் சென்ற சிறுமி இதுகுறித்து தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் சகோதரர் குற்றம் சாட்டப்பட்ட இளைஞனிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். இதில் கோபமடைந்த அந்த இளைஞர் தலித் சமூகத்தைச் சேர்ந்த அந்த சிறுமியையும் அவரது தந்தையையும், சகோதரனையும் குடும்பத்தினருடன் வந்து தாக்கியுள்ளார்.

இதுகுறித்து காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

Leave Comments

Comments (0)