கள்ளச் சாராயம் காய்ச்சி வந்த கும்பலை அம்பலப்படுத்தியதற்காக மக்கள் மன்ற தோழர்கள் மீது தாக்குதல்

/files/detail1.png

கள்ளச் சாராயம் காய்ச்சி வந்த கும்பலை அம்பலப்படுத்தியதற்காக மக்கள் மன்ற தோழர்கள் மீது தாக்குதல்

  • 2
  • 0

சாதிய மதவாத சக்திகளை எதிர்த்து மக்களின் உரிமைகளுக்காக களமாடி வரும் அமைப்புகளில் ஒன்றாக திகழ்ந்துவரும் மக்கள் மன்றம் அமைப்பை சேர்ந்த தோழர் விவேக் மீது இந்துமுன்னணியினரும், பாமகவினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கடந்த 14ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலுள்ள ஈரளச்சேரி கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக பொதுமக்களிடமிருந்து ரகசிய தகவல் வர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் தினேஷும்,  வேலூர் மாவட்ட மக்கள் மன்ற பொறுப்பாளரான விவேக்கும் சுமார் 50 இளைஞர்களோடு சாராயம் காய்ச்சும் இடத்தை கண்டுபிடித்து முற்றுகையிட்டனர். இதுகுறித்து காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. கடந்த 14ஆம் தேதி 8 மணி தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் காவல்துறையினர் 2 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்குள்ளாக கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் தப்பித்து சென்றுள்ளனர்.

கள்ளச் சாராய காய்ச்சி வந்த கும்பலை கண்டித்து அதை அம்பலப்படுத்தியதற்காக அப்பகுதி மக்கள் மன்ற தோழர்கள் விவேக் மற்றும் மணி ஆகிய இருவர் மீது 50 க்கும் மேற்ப்பட்ட இந்துமுண்ணனி மற்றும் பாமக கும்பல் நேற்று (அக்டோபர் 24) மாலை 4  மணிக்கு கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தலித் இளைஞர்கள் மீதும் மக்கள் மீதும் அந்தக் குமபல் கொடுர தாக்குதல் நடத்தியுள்ளது.

alt text 

படுகாயமடைந்த தோழர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த கலவரத்தை நடத்தும் கும்பல் மீது மாவட்ட காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துவருவதாக மக்கள் மன்ற தோழர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


 

Leave Comments

Comments (0)