திருவள்ளுவர் சிலைக்குக் காவி துண்டு அணிவித்த அர்ஜுன் சம்பத் கைது

/files/detail1.png

திருவள்ளுவர் சிலைக்குக் காவி துண்டு அணிவித்த அர்ஜுன் சம்பத் கைது

  • 0
  • 0

பிள்ளையார் பட்டியில் திருவள்ளுவர் சிலைக்குக் காவி துண்டு அணிவித்த அர்ஜுன் சம்பத்தை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

தஞ்சை மாவட்டம், பிள்ளையார் பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று காலை (நவம்பர் 06) காவி துண்டு, ருத்ராட்ச மாலை அணிவித்து கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  

இந்த தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவி துண்டு மற்றும் ருத்ராட்ச மாலையைக் கழற்றி, பிஅர்ஜுன் சம்பத்தை கைது செய்துள்ளனர்.  
 

Leave Comments

Comments (0)