தலித் மாணவர் மீது ஆணவ சாதி மாணவர் தாக்குதல்-  நடவடிக்கை எடுக்கக்கோரி தீஒமு தோழர்கள் வலியுறுத்தல்

/files/detail1.png

தலித் மாணவர் மீது ஆணவ சாதி மாணவர் தாக்குதல்-  நடவடிக்கை எடுக்கக்கோரி தீஒமு தோழர்கள் வலியுறுத்தல்

  • 0
  • 0

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், பாலமேடு அருகே உள்ளது மறவப்பட்டி. இந்த கிராமத்தில் வசித்துவரக்கூடிய தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவர் பாலமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 11ஆம் தேதி அதே பள்ளியில் படிக்கும் மோகன்ராஜ் என்ற மாணவரின் பள்ளி பையை மகா ஈஸ்வரன் என்ற மாணவன் எடுத்து மறைத்து வைத்துக் கொண்டு தேட வைத்துள்ளார். இதனையடுத்து சரவணகுமாரும், மோகன்ராஜும் சென்று மகா ஈஸ்வரனிடம் பையை எங்கு வைத்துள்ளாய் என்று கேட்டுள்ளனர். இதில் கோபமடைந்த மகா ஈஸ்வரன், சரவணகுமாரைப் பார்த்து ”ஏண்டா சக்கிலிய கூ**மகனே நீயெல்லாம் என்னை எதிர்த்து பேசுவியா” என்று கூறி பிளேடால் சரவணகுமாரின் முதுகில் கிழித்துள்ளார்.

இதில் சரவணகுமாரின் முதுகுபகுதியில் படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து சரவணகுமார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

alt text

இந்த சம்பவம் அறிந்த இந்திய மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்த தோழர்களும் (SFI), தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த தோழர்களும் பாதிக்கப்பட்ட மாணவரையும், அவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்பு இந்த சம்பவம் குறித்து 
உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
 

Leave Comments

Comments (0)