தலித் மக்கள் பயன்படுத்தும் பொது பாதையை அடைத்த ஆணவ சாதியினர்

/files/detail1.png

தலித் மக்கள் பயன்படுத்தும் பொது பாதையை அடைத்த ஆணவ சாதியினர்

  • 1
  • 0

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தலித் மக்கள் பயன்படுத்தும் பொது பாதையை ஆணவ சாதியினர் குழி தோன்றி அடைத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலூர் அருகே உள்ள சத்திய மங்களம் கிராமத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற கோவில் திருவிழாவில் ஆணவ சாதியினர், தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் ஆணவ சாதியைச் சேர்ந்தவர்களை எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதில் கோபமடைந்த ஆணவ சாதியினர் தொடர்ச்சியாகத் தலித் மக்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வந்துள்ளனர். அதில் ஒன்றாக அம்மக்கள் பயன்படுத்தும் பொது பாதையில் குழி தோன்றி பாதையை அடைத்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் உட்படப் பல இடங்களில் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

”பொது வழியை அடைத்ததால் குழந்தைகளுக்குக் காய்ச்சல் என்றால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூடக் கஷ்டமாக இருக்கிறது. பல இடையூறுகளைத் தொடர்ந்து எங்கள் மீது செலுத்திவருகின்றனர். பல முறை புகார் அளித்தும் இதுவரை யார் ஒருவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. தலித் என்றால் இந்த ஊர்மக்கள் தான் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்றால் அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள்” என்று பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை அளித்துள்ளனர்.

Leave Comments

Comments (0)