நாற்காலியில் அமர்ந்ததற்காக தலித் சிறுவன் மீது ஆணவ சாதியினர் தாக்குதல்

/files/detail1.png

நாற்காலியில் அமர்ந்ததற்காக தலித் சிறுவன் மீது ஆணவ சாதியினர் தாக்குதல்

  • 0
  • 0

குஜராத்தில் 14 வயது தலித் சிறுவன் நாற்காலியில் அமர்ந்தார் என்பதற்காக ஆணவ சாதியைச் சேர்ந்த நான்கு பேர் அந்த சிறுவனைக் கொடுமையாகத் தாக்கியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

குஜராத் மாநிலம், தீசா வட்டம், ஜெர்டா கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டிருக்கிறார். இதனை அதே பகுதியில் வசித்துவரக்கூடிய தர்பார் சாதியைச் சேர்ந்த விஜுபா தர்பார், சங்கர்சிங் தர்பார், வன்ராஜ்சிங் தர்பார், ஹுராஜ்சிங் தர்பார் ஆகிய நான்கு பேரும் (இந்த நான்கு பேரும் 20 வயது மதிக்கத்தக்கவர்கள்) பார்த்துள்ளனர். இதனால் கோபமடைந்த அந்த நால்வரும் சிறுவன் இரவு பள்ளிக்கு ( tuition) சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருக்கும்போது சாதிப் பெயரைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசி, "என்ன தைரியம் இருந்தால், ஹோட்டலில் நாற்காலியில் அமர்ந்து சாப்பிடுவாய்” என்று கேட்டு கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதனைக் கடைக்குப் பால் வாங்க சென்றுகொண்டிருந்த சஹ்தேவ் டாபி என்பவர் பார்த்து சிறுவனைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் அவரையும் அந்த நால்வர் தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர். இருவரும் மயங்கிவிழுந்ததையடுத்து அப்பகுதி வழியாக சென்ற சிலர் மீட்டு தீசா அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், “இருவர் கால்களிலும் காயங்கள் அதிகம் உள்ளதால் அவர்கள் நடக்க சில காலம் ஆகும்” என்று தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.  

Leave Comments

Comments (0)