ஹெல்மெட் அணியாத கல்லூரி மாணவனை பூட்ஸ் காலால் தாக்கிய காவல் உதவி ஆய்வாளர்

/files/detail1.png

ஹெல்மெட் அணியாத கல்லூரி மாணவனை பூட்ஸ் காலால் தாக்கிய காவல் உதவி ஆய்வாளர்

  • 0
  • 0

நாமக்கல் மாவட்டம், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற கல்லூரி மாணவனைக் காவல் உதவி ஆய்வாளர் பூட்ஸ் காலால் தாக்கிய சம்பவம் நடந்திருக்கிறது

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரத். கல்லூரி மாணவரான இவர் தனது நண்பருடன் வாழப்பாடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். ஆனால் சரத் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டிவந்துள்ளார். இதனை பார்த்த   உதவி ஆய்வாளர் சிவசக்தி என்பவர், சரத்தை வழிமறித்து பூட்ஸ் அணிந்திருந்த காலால் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த சரத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave Comments

Comments (0)