நீலச்சட்டை பேரணி குறித்த ஆலோசனைக் கூட்டம்

/files/detail1.png

நீலச்சட்டை பேரணி குறித்த ஆலோசனைக் கூட்டம்

  • 0
  • 0

 

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி எதிர்வரும் டிசம்பர் 15ஆம் தேதி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள நீலச்சட்டை பேரணி  மற்றும் சாதி ஒழிப்பு மாநாடு குறித்தான ஆலோசனைக் கூட்டம் கோவையில் நேற்று (நவம்பர் 11) நடைபெற்றது.

எதிர்வரும் டிசம்பர் 6ஆம் தேதி புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாள். அந்நாளை நினைவுபடுத்தும் வகையிலும், அண்ணல் அம்பேத்கரின் கொள்கையில் ஒன்றான சாதி ஒழிப்பை முன்னிறுத்தும் வகையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாடு ஒன்றை நடத்தவிருக்கின்றனர்.  அந்த பேரணி எதிர்வரும் டிசம்பர் 15ஆம் தேதி கோவையில் நடைபெறவிருக்கிறது. இதில் அம்பேத்கரிய, பெரியாரிய, தமிழ்த்தேசிய மற்றும் முற்போக்கு அமைப்புகள் பங்கேற்கின்றன.

இந்நிலையில், நேற்று அந்த பேரணி குறித்த கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதிலும் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த அனைத்து இயக்கங்களின் தலைவர்களும் பங்கேற்றனர். பேரணியை  வெற்றிகரமாக நடத்துவதற்கான வேலைத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

Leave Comments

Comments (0)