திருநங்கையைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட இளைஞர்- கொலை மிரட்டல் விடுக்கும் பெற்றோர்

/files/detail1.png

திருநங்கையைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட இளைஞர்- கொலை மிரட்டல் விடுக்கும் பெற்றோர்

  • 0
  • 0

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்தவர் பூமிகா. திருநங்கையான இவரும், பரமக்குடியைச் சேர்ந்த அருண் என்பவரும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம், அருணின் பெற்றோருக்கு தெரியவந்தையடுத்து காதலுக்கு எதிர்ப்பு கிளம்பத் தொடங்கியிருக்கிறது. இதனால் இருவரும் கடந்த மே மாதம் நெல்லைக்குச் சென்று திருமணம் செய்துகொண்டு அங்கேயே வாழ்ந்துவந்தனர். 

இந்த செய்தியை அறிந்துகொண்ட அருணின் பெற்றோர் நெல்லைக்குச் சென்று `தன் மகனை விட்டு பிறிந்து செல்லவில்லை என்றால் கொலை செய்துவிடுவோம்` என்று பூமிகாவை மிரட்டியுள்ளனர். இதனால் இருவரும் அங்கிருந்து சேலத்திற்குச் சென்று அங்கு வாழ்ந்துவந்தனர். அங்கேயும் அருணின் பெற்றோர் சென்று மீண்டும் மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.

இதனையடுத்து பூமிகாவும், அருணும் நேற்று (அக்டோபர்  04) சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமாரை நேரில் சந்தித்து இதுகுறித்து புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன்பேரில் அவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.
 

Leave Comments

Comments (0)