மீண்டுமொரு புயல்: எங்கு கரையை கடக்கிறது?  

/files/detail1.png

மீண்டுமொரு புயல்: எங்கு கரையை கடக்கிறது?  

  • 0
  • 0

-கருப்பு 

கஜா புயல் கரையை கடந்து இன்னும் ஒரு மாதம் நிறைவடையாத நிலையில், தற்போது மீண்டுமொரு புயல் சின்னம் உருவாக உள்ளது என்ற வானிலை மையத்தின் தகவல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறும்போது, " நேற்று தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது இது சென்னைக்கு தென் கிழக்கில், 1,170 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. மேலும் இது இன்று இரவுக்குள், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். நாளை இது புயலாக வலுப்பெற்று, தற்போதைய நிலவரப்படி, நாளைப் புயலாக மாறி, தெற்கு ஆந்திரா - வடக்குத் தமிழ்நாடு நோக்கி நகர்ந்து கரையைக் கடக்கும். இதன் காரணமாக, டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் வட தமிழகத்தின் கடலோர மாவட்டத்தில், 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்தக் காற்று வீசக்கூடும். மேலும், வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் எனத் தெரிவித்துள்ளார். மேலும், புயல் கரையைக் கடக்கும் இடம் தற்போது வரை கணிக்கப்படவில்லை. புயல் நெருங்கி வரும்போது கரையைக் கடக்கும் இடம் உறுதிப்படுத்தப்படும். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் அருகில் உள்ள துறைமுகங்களில் கரை திரும்பவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Leave Comments

Comments (0)