கூலியை கேட்டதற்காக 60 வயது முதியவரின் விரல்களை வெட்டிய காண்ட்ரக்டர்

/files/detail1.png

கூலியை கேட்டதற்காக 60 வயது முதியவரின் விரல்களை வெட்டிய காண்ட்ரக்டர்

  • 0
  • 0

நாக்பூரில், வேலை செய்த கூலியைக் கேட்டதற்காக 60 வயது முதியவரின் கை, கால் விரல்களை வெட்டியுள்ளது காட்டுமிராண்டித் தனமான கும்பல் ஒன்று.

ஒடிசாவில் உள்ள நுபாடாவை சேர்ந்தவர் சமுரு பஹாரியா. 60 வயதான இவர் நாக்பூரில் கட்டுமான பணி தொழிலாளியாகக் கடந்த ஜூலை மாதம் முதல் வேலை செய்துவருகிறார். இவருக்குக் கடந்த சில மாதங்களாகவே சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் டோலால் சட்னாமி மற்றும் பிடேசி சுனாமி ஆகிய இரு காண்ட்ரக்டரைச் சந்தித்த பஹாரியா கூலி கொடுக்கும்படி கேட்டுள்ளார். அவர்களோ கூலி கொடுக்க மறுத்துவிட்டதோடு, பஹாரியவை தாக்கி அவர் வலது கையில் மூன்று விரல்களையும், வலது காலில் உள்ள ஐந்து விரல்களையும் வெட்டி நாக்பூர் ரயில் நிலையத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். அங்கிருந்த ரயில்வே காவல்துறையினர் பஹாரியாவை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் மூன்று மாதங்களாகச் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், பஹாரியாவை அவரது உறவினர்கள் கடந்த செப்டம்பர் மாதம் சொந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர். 

”அவரது வாழ்நாள் முழுவதும் அவரை ஊனமுற்றவர்களாக விட்டுவிட்டார்கள். அவரால் நடக்க முடியாது. எதையும் வைத்திருக்க முடியாது. அவர்கள் எனது குடும்ப வாழ்க்கையை நாசப்படுத்திவிட்டனர்” என்று பஹாரியாவின் மகன் துலாராம் தெரிவித்துள்ளார்.

Leave Comments

Comments (0)