யார் இந்த ரஞ்சித் சிங்?

/files/P1-2020-12-09-19:41:35.jpg

யார் இந்த ரஞ்சித் சிங்?

  • 61
  • 0

T.செல்வமணி


ஒரு சர்வதேச நிறுவனம் உலக அளவில் சிறந்த ஆசிரியரை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்குகிறது. 

பணம் கொடுத்து அதிகாரத்திற்கு அடிபணிந்து கிடைக்கும் நம் நாட்டு விருதுகள் போல் அல்ல, உண்மையிலேயே மாணவர்களின் வாழ்வை உயர்த்தும் ஆசிரியர்களை கண்டுபிடித்து அங்கீகரிப்பதற்கான ஒரு முயற்சி அதில், சர்வதேச அளவில் ஒரு இந்தியர்கள் முதலிடம் பெற்றுள்ளார். 

யார் அவர்?


1924 ஆம் ஆண்டு மத்திய ஆசியாவிலே, சோவியத் குடியரசையில் இருக்கக்கூடிய ஒரு குக்கிராமம் அந்த மலை கிராமத்தில் கல்வி என்றால் என்னவென்றே தெரியாத மக்களுக்கு தனி ஆளாய் தூய்சன் என்ற பெயர் கொண்ட கம்யூனிச தோழர், 

மாட்டு தொழுவத்தை பள்ளியாக மாற்றி சிறுவர், சிறுமிகளுக்கு கல்வி பயிற்றுவிக்க தன் வாழ்வை அர்ப்பணிக்கிறார், இறுதியாக மாட்டுத்தொழுவமாக இருந்த பள்ளி தற்போது மிகப் பெரிய கட்டிடமாக மாறுகிறது அதை அவரிடம் கல்வி பயின்ற மாணவி அல்டினாய் ஒரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக வந்து திறந்துவைக்கிறார், அப்போது நாட்டின் விடுதலைக்காக ராணுவத்தில் சேர்ந்து தன் உயிரை இழக்கிறார் தூய்சன் இப்படியாக அந்த ஆசிரியரின் கதை நிறைவுற்றது. 

அவரின் வாழ்வை காதல், புரட்சி,கல்வி இணைந்த காவியமாக ரஷ்யாவில் ஃபர்ஸ்ட் டீசர்( 1965) என்கிற திரைப்படமாக வெளியாகி இருக்கிறது அது போன்றதொரு வாழ்வை தான் ரஞ்சித் சிங்கும் வாழ்ந்து வருகிறார்.
லண்டனைச் சேர்ந்த வர்க்கி அறக்கட்டளை கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்த சர்வதேச ஆசிரியர் பரிசுத் திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் நடைமுறைப்படுத்தி வருகிறது. 


இந்த சிறந்த ஆசிரியர் விருதுக்கு 140 நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர், இதிலிருந்து 10 ஆசிரியர்கள் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகினர். 


அதில் மகாராஷ்டிராவின் சோலாம்பூர் மாவட்டத்தில், பரிஷித் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆரம்ப பள்ளி ஆசிரியரான ரஞ்சித் சிங் இந்த ஆண்டுக்கான சிறந்த ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


ஒரு மாட்டுத் தொழுவம், பக்கத்திலேயே சாமான்கள் போட்டு வைக்கும் குடோன், இரண்டுக்குமிடையில் சொருகினார் போல ஒரு ஷெட் போன்ற சிறிய கட்டிடம். 

அதுதான் " ஜில்லா பரிஷத் பள்ளி" ஆசிரியர் இல்லாமல் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள், அந்த மிகச் சிறிய மலைக் கிராமத்தில் பெரும்பான்மையான மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள விவசாயிகள். 


2009இல் ரஞ்சித்சிங் திசேல் பரிதிவாடி மலை கிராமத்திற்கு ஆசிரியராக வேலைக்கு வந்த போது  அவர் வேளை செய்யப்போகும் பள்ளி இப்படித்தான் இருந்தது. 


70, 80களில் இப்படித்தான் நாடு முழுவதும் பள்ளிகள் இருந்தன ஆனால் 2009இல் இதுபோன்ற சூழலில் யாராவது பணிபுரிய நினைப்பார்களா? 


பெரிய ஆர்வம், ஆசை எல்லாம் இல்லாமல் தான் இந்த வேலைக்கு வருகிறார் ஆனால் 

மிஷினை வடிவமைக்கிறவர்கள் இன்ஜினியர்கள் என்றால், நான் குழந்தைகளை அவங்க மூலம் இந்த சமுதாயத்தை வடிவமைக்கும் ஆசிரியர்கள்  இந்த சமுதாயத்தையே வடிவமைக்கும் இன்ஜினியர்கள் என்று புரிந்து கொள்கிறார் தன் வேலையை பணியாக நினைக்கிறார்.
அவருக்கு அங்கு இருந்த முதல் பிரச்சனை மொழி.. 

ரஞ்சித் மகாராஷ்டிர மாநிலம் , அவர் வேலைசெய்யும் பள்ளி பரிதிவாடியும் மகாராஷ்டிரத்தில் தான் உள்ளது. ஆனால் அது கர்நாடகா எல்லை பகுதி. 


பெரும்பாலான பழங்குடி மக்கள் கன்னடம் பேசுகிறார்கள் அங்கே உள்ள குழந்தைகள் பெரும்பாலும் விவசாயக் கூலி வேலை செய்கிறார்கள் அது மட்டுமல்லாது குழந்தை திருமணம் இன்னும் அக்கிராமத்தில் அதிக அளவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது இந்த பிள்ளைகளை படிக்கவைக்க ரஞ்சித்தும் கன்னடம் கற்றுக் கொள்ள தேவையிருப்பதை உணர்கிறார், கடினப்பட்டு கன்னடம் கற்றுக் கொள்கிறார்.

அவர்களின் குடும்பங்களில் ஒருவராக மாறுகிறார், மராத்தி மொழியில் இருந்த அவர்களின் பாடப்புத்தகங்களை தன் சொந்த முயற்சியில், தன் சொந்த செலவில் கன்னட மொழியில் மாற்றி வடிவமைக்கிறார். 


இதுமட்டுமல்லாமல் ஒவ்வொருவருக்கும் பிரத்தியேக 

Q R கோட் யை சேர்க்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார். 


ஏனெனில் படிக்கும் பாடம் ஒன்றாக இருந்தாலும் குழந்தைகளின் கற்றல் திறன் வேறு, கற்றுக் கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம் வேறு, அந்த Q R கோட்  ஸ்கேன் செய்யும் குழந்தைகளின் அறிவுத் திறனுக்கு ஏற்ப தனித்தனி பயிற்சிகளையும் வடிவமைத்தது. 


இந்த சிறந்த திட்டத்தை இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தினால் நாடெங்கும் உள்ள குழந்தைகளுக்கு நல்லது. 

இவருடைய தொடர் முயற்சியால் 2016 ஆம் ஆண்டு மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக 98 சதவீதம் தேர்ச்சியோடு முன்னிலை வகித்தது.

இவரது பள்ளி. 
உச்சகட்ட அங்கீகாரமாக Global Best Teacher 2020, ரஞ்சித்துக்கு விருதுடன் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை வழங்கியது விருது அறிவிக்கப்படுவதற்கு முன்பே தான் ஜெயித்தால் தன் பரிசு தொகையில் 50% முதல் பத்து போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொள்வேன் என்று தெரிவித்திருந்தார்.

 

இப்பொழுது அதையும் செய்து காட்டியுள்ளார். 

அந்த நிதி அந்தந்த நாடுகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்தப்படும் என்றார். 


இப்படி எத்தனை பேர் பணம் , பதவி, அதிகாரம், புகழ் என்கிற எதிர்பார்ப்பு இல்லாமல் மக்களுக்காக உழைக்கிறார்கள் என்று எண்ணிப்பாருங்கள். 

சமுதாய முன்னேற்றம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்பதில் எத்தனை உறுதியாக இருந்துள்ளார். பழங்குடியின மக்களுக்கு பரிவுடன் பாடம் நடத்தி வரும் ரஞ்சித் இந்த அங்கீகாரத்திற்கு உரியவரே. 


ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே போன்று மக்களின் ஆசிரியராக விளங்கும் ரஞ்சித் சிங் அவர்களுக்கு விருது வழங்கப்படும் போது ஊடகங்கள் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை சிலாகித்துக் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது..

Leave Comments

Comments (0)