வெற்றி திருமகன் திருமாவளவன் மாண்புகள் நூல் வெளியீடு !

/files/Sized-2021-08-09-18:56:10.jpg

வெற்றி திருமகன் திருமாவளவன் மாண்புகள் நூல் வெளியீடு !

  • 18
  • 0

தவ.செல்வமணி


கவிஞர் இளமாறன் அவர்கள் எழுதிய திரு " குறள்கள் என்கிற தலைப்பை கொண்ட வெற்றி திருமகன் திருமாவளவன் மாண்புகள் எனக்கூடிய துணை தலைப்பு கொண்ட நூலை கடந்த 8.08.2021 அன்று அசோக்நகரில் உள்ள அம்பேத்கர் திடலில் வெளியிட்டார்.


இந்த புத்தக வெளியீட்டில் தோழர் திருமாவளவன்,மற்றும் விசிக சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர் ,அந்த நூலை வெளியிட்டு தோழர் திருமா ஆற்றிய உரையானது,உலகத்திலேயே தலைசிறந்த புத்தகம் என்றால் அது திருக்குறள் தான் பைபிளோ,குரானோ உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கலாம் ஆனால் அவைகள் குறிப்பிட்ட மத சார்பு கொண்டவை ஆனால் எவ்வித சார்புகளும் அற்று சாதி,மதம்,இனம்,மொழி கடந்து அனைவருக்கும் தேவையான அற கருத்துக்களை எடுத்துரைக்கும் நூல் தான் திருக்குறள், அத்தகைய நூலின் சிறப்பே மிக சுருக்கமாக எளிதாக நீண்ட நெடிய ஆழமான கருத்துக்களையும், எளிமையாக எடுத்துரைப்பதே அந்த எழுத்துநடை மொழி நடையை உள்வாங்குவதற்கும் எழுதுவதற்கும் நிச்சயம் அறிவு கூர்மை வேண்டும் அப்படியான அறிவு கூர்மையில் மொழி வளமை கொண்டே அண்ணன் இந்த நூலை எழுதியுள்ளார் இந்த நூல் வெறும் தனிநபர் துதி பாடுவதற்க்கோ,என்னிடம் பெயர் வாங்குவதற்க்கோ எழுதப்பட்டது அல்ல,அவர் ஆரம்பகாலத்தில் இருந்து என்னை கவனித்து வருகிறார்,என்னோடு காலத்தில் நிற்கிறார் ,கட்சியின் அமைப்பு செயலாளராக அக்கட்சியின் தலைமையை பொது மக்களிடம் எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்கிற நோக்கத்திலே தான் இந்த நூலை எழுதியுள்ளார்.


திருக்குறளில் 133 அதிகாரங்களும் 1330 குறள்களும் இருக்கும் அதைப்போல இந்த நூலில் 26 அதிகாரங்களும் அதிகாரங்களுக்கு 5 குறள்களுமாக எழுதியுள்ளார்.

இதிலே அவர் மாண்புகள் என்று தலைப்பிட்டு ஒவ்வொரு அதிகார தலைப்புகளையும் ஒவ்வொரு மாண்புகளாக விவரிக்கும் தனமையே மிக அழகாக உள்ளது,அன்பாய் திருமா,பண்பாய் திருமா,அமிழ்தாய் திருமா, தமிழாய் திருமா,தாயாய் திருமா,என்று அதிகாரங்களை அடுக்குகிறார்.


எந்த ஒரு நூலையும்,கவிதையையும் படித்து புரிந்து அதன் நுட்பங்களை,நுணுக்கங்களை ஆராய்ந்து பேசுவதற்க்கே ஒரு அறிவு நுட்பம் வேண்டும் அந்த அறிவை கொண்டிருப்பதாக தான் என்னை உணருகிறேன்.என்னை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும் அவர்கள் அன்பின் மிகுதியால் இருக்கிறார்கள் என்றாலும் என்னை படிக்க விடாமல்,எழுத விடாமல் எப்போதும் என்னையே சுற்றி ஒரு கூட்டம் இருக்கும் வீடு அலுவலகம் என்று நான் இருக்கும் இடம் எங்கும் எனது கட்சி தோழர்கள் நிறைந்திருப்பார்கள்.


அதை கூட இவர் அழகிய கவிதையில் வடித்திருக்கிறார்.


எத்தனை நெருக்கடிகளும்,இன்னல்களும் நம்மை சூழ்ந்து நிற்கும் போது இசையும்,களையும் தான் நம்மை ஆற்றுப்படுத்தும் அப்படிதான் நான் இந்த நூலை எடுத்துக்கொள்கிறேன்.


இலட்சோப இலட்ச சிறுத்தைகளை தொல் திருமா 

மெச்சும்படி வளர்த்த தாய் .


குட்டி சிறுத்தைகள் கூட்டமாய் சூழ்ந்தபடி 

ஒட்டி உறவாடல் மாண்பு .


நீதியற்ற சாதியதால் நேரும் கொடுமைகளை 

மோதி அழிக்க வந்தவாள் .
இப்படியான கவிதைகளில் வெறும் வேற்று புகழ்ச்சி மட்டும் அல்ல நமது கொள்கையும் அடங்கியுள்ளது,இத்தனை காலம் நம்மோடு காலத்தில் இருந்ததால் தான் இவரால் இப்படி எழுத முடிந்துள்ளது.


இப்படியான படைப்புகள் நிச்சயம் தேவையானது அவைகள் தான் நம்மை இன்னும் முன்னோடிக்கி நகர்த்தும்,நம் கொள்கையை மக்களிடம் இன்னும் வீரியமாக கொண்டு சேர்க்கும்.


இந்த புத்தகமே ஏதோ தனி நபருக்காக எழுதியது போல் அல்லது ஒரு இயக்கத்தின் கட்சியின் தலைமை எப்படி இருக்க வேண்டும் அதன் பண்புகள் எவ்வாறு இருந்தால் வேண்டும் என்று விளக்கிற ஒரு நூலை படைத்த தோழருக்கும்,இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறி நிறைவு செய்தார்.

Leave Comments

Comments (0)