6 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் PURE CINEMA புத்தக அங்காடி!

/files/Capture-2021-04-14-20:50:38.JPG

6 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் PURE CINEMA புத்தக அங்காடி!

  • 18
  • 0

தவ.செல்வமணி


மிருக வகைகளில் ஒன்றான மனித இனம் மனிதன் என்கிற மதிப்பை பெறுவதற்கு மிக முக்கியமான ஒன்று புத்தகங்கள் தான் அவை தான் காட்டுமிராண்டி காலத்தில் இருந்து கணினி யுகத்துக்கு மனிதனை அழைத்து வந்தது.


சைகை,ஓசை இவைகளுக்கு பின் மொழி என தோற்றம் பெற்ற பின் மொழியில் எழுத்துருவாக்கம் என்ற ஒன்று வந்த பின்பு தான் மனித சமூகத்தில் பெரும் புரட்சியும் மாற்றமும் நிகழ்ந்தது.


மனிதன் தன் வரலாற்றை வாழ்வியலை வசந்தத்தை வருத்தத்தை அனைத்தையும் பதிவு செய்ய ஆரம்பித்தான் அதை அடுத்த தலைமுறைக்கு புத்தகங்கள் எடுத்து சென்றன,சிறை சாலையில் அடைபட்டு கிடக்கும் கைதிக்கும் சுதந்திரம் கொடுக்க கூடிய பேராற்றல் கொண்டது தான் புத்தகங்கள் ஆனால் அவற்றை மக்களிடம் கொண்டு செல்வது எத்தகைய கடினமான பணியாக தற்போது உள்ளது.உலகம் முழுவதும் புத்தகங்கள் நிரம்பி கிடக்கின்றன,பூக்களை கூவி விற்கலாம் புத்தகம் ?


மதுக்கடைக்கு கூட விளம்பரம் தேவையில்லை குவிந்திருக்கும் கூட்டத்தை பாருங்கள்! ஆனால் புத்தக கடையை நடத்துவது என்பது சமூக பணி தான் அதில் லாபம் என்பதும் பொருளாதார பலன் என்பதையும் எதிர்பார்க்க இயலாது,எல்லாவற்றையும் வியாபாரமாக்கிய கூட்டம் புத்தக நிலையத்தையும் கூட வியாபாரம் ஆக்கியுள்ளது ஆனால் தமிழ் ஸ்டுடியோ எனும் பேரியக்கத்தால் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வரும் பியூர் சினிமா புத்தக அங்காடி என்பது அப்படியானது அல்ல,சினிமா என்பது வெகு சனத்தையும் சென்றடைய வேண்டும்,படம் பார்க்கும் படம் எடுக்கும் அறிவை மேம்படுத்த வேண்டும்,தமிழ் சினிமா நல்ல சினிமாவாக இருக்க வேண்டும், அறம் பேசும் கலை படைப்புகள் தமிழ் சினிமாவில் வளம் வரவேண்டும் என்கிற உன்னத நோக்கில் தமிழ் ஸ்டுடியோ நிறுவனர் தோழர் அருண் அவர்களால் தொடங்கப்பட்டது,ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் அவர்களால் வட பழனியில் திறந்து வைக்கப்பட்டது.சமத்துவம் மலர தன் வாழ்நாளை அர்ப்பணித்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் 14 தான் பியூர் சினிமா புத்தக அங்காடி திறந்து வைக்கப்பட்டது.


எந்த ஒரு இலாப நோக்கும் இல்லாமல்,பெரு முதலாளிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவங்களின் ஆதரவு இன்றி 5 வருடத்திற்கு மேலாக வெற்றிகரமாக ஒரு புத்தக அங்காடியை அதுவும் சினிமாவிற்க்கென்றே ஒரு புத்தக கடையை நடத்துவது என்பது தமிழ் ஸ்டுடியோ போன்ற இயக்கத்தால் மட்டுமே சாத்தியம் !


தற்போது பல இயக்கங்கள் நூலகங்கள் புத்தக கடைகளை துவக்கலாம் ஆனால் அதற்க்கு முன்னோடியாக இருந்தது தமிழ் ஸ்டுடியோவினுடைய முன்னெடுப்புகள் தான்,இந்தியாவில் சினிமாவிற்கென்றே பிரத்தியேகமாக இயங்கும் முதல் புத்தக அங்காடி பியூர் சினிமா தான்.


எல்லோரும் நல்ல சினிமா வேண்டும்,தமிழ் சினிமாக்கள் உலக சினிமாவின் தரத்திற்கு வர வேண்டும் என்று பேசினாலும் எழுதினாலும் அதற்க்கு செயலாக்கம் கொடுத்தது தமிழ் ஸ்டுடியோ தான்.

புத்தக அங்காடியாக மட்டுமல்லாது பல வருடங்கள் நூலகமாகவும் செயல்பட்டது அப்போது ஆயிரக்கணக்கானோர் சினிமாவை மிக எளிதாக இலவசமாகவும் இங்கே கற்றுக் கொண்டார்கள்.


குறிப்பாக உதவி இயக்குனர்கள் தங்களுக்கான கற்றல் கூடமாக பியூர் சினிமாவை பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.


உலகில் பல திரை ஜாம்பவான்கள் பயன்படுத்திய அவர்கள் எழுதப்பட்ட சினிமா தொழில்நுட்பத்தை எளிய முறையில் மொழி பெயர்த்து பலரை சென்று சேர்ந்த சினிமா புத்தகங்கள் தமிழ் ஸ்டுடியோவின் அங்கமான பதிப்பகம் பேசா மொழியிலேயே வெளிவந்தது.


சினிமாவை பயிற்று விப்பதற்காக பேசா மொழி பதிப்பகமும்,அரசியலுக்காகக் கருப்பு பதிப்பகமும் தொடங்கப்பட்டது.


சினிமா தொழில் நுட்பம் மட்டுமல்லாது இலக்கியம் தான் நல்ல சினிமாவை,நல்ல கருத்துரு கொண்ட சினிமாவை கொடுக்கும் என்பதற்காக அனைத்து வகையான புத்தகங்களும் கொண்ட செங்காந்தள் புத்தக நிலையத்தையும் கொரோனா பேரிடருக்கும் பின் தொடங்கப்பட்டது.


புத்தகங்கள் மட்டுமின்றி இந்த இடம் சினிமா பயிற்சி கூடமாகவே விளங்குகிறது ,திரைப்படங்களில் வழி கற்றல் என்பதற்காக பல மிகச்சிறந்த திரைப்படைப்புகள் இலவசமாக திரையிடப்படுகிறது.

இந்தியாவின் முதல் தலித் திரைப்பட விழா,பெண்கள் திரைப்பட விழா,காதலர் தின சிறப்பு சினிமா,கிம் கி தக் சிறப்பு சினிமா,விவசாய சினிமா என 100 க்கும் மேற்பட்ட திரையிடல்கள் இந்த புத்தக வளாகத்தில் நடத்தப்பட்டுள்ளது.


மிக குறைந்த செலவில் மற்றும் இலவசமாக பல சினிமா பயிற்சி பட்டறைகளை முன்னெடுத்து வரப்படுகிறது.நாசர் நடிப்பு பயிற்சி பட்டறை,மிஷ்கினுடன் ஒரு நாள் பயிற்சி பட்டறை,கன்னட நடிகர் இயக்குனர் உபேந்திரா நடிப்பு பயிற்சி,இவ்வாறு இயக்கம்,நடிப்பு,ஒளிப்பதிவு,படத்தொகுப்பு என அனைத்து சினிமா பிரிவுகளுக்கும் பயிற்சி பட்டறைகளை இதே புத்தக வளாகத்தில் தமிழ் ஸ்டுடியோ நடத்தி வருகிறது.


இவ்வாறு பல சினிமா கலை முன்னெடுப்புகளை தமிழ் ஸ்டுடியோ முன்னெடுத்து வருகிறது,ஒரு புறம் மசாலா,வியாபார, கார்ப்பரேட் வணிக திரைப்படத்தை எதிர்த்தும் .

மறு புறம் அதிகார வர்க்கத்தின் சமூக அநீதிகளை எதிர்த்தும் தொடர்ந்து சமர் செய்து வரும் கலை இயக்கம் தான் தமிழ் ஸ்டுடியோ இந்த அறிவியல் யுகத்திலும் சாதியம்,மதவாதம்,இனம்,மொழி என்ற பிரிவு பேதங்கள் கே,வன்மம்,குரோத எண்ணங்கள்,அரசியல் சமூக சீர்கேடுகள் என அனைத்தும் இந்த உலகை உலுக்கி வரும் நிலையம் மனிதனை பண்படுத்த வேண்டிய பொறுப்பு கலையிடம் தான் உள்ளது.

கலையையும் மேம்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு இயக்கங்களிடம் தான் உள்ளது.அந்த பணியை கடந்த 12 வருடங்களாக நிகழ்த்தி வரும் தமிழ் ஸ்டுடியோவின் உழைப்பின் பலனை தமிழ் சினிமா தற்போதே கண்கூட பார்த்து தான் வருகிறது.

இன்னும் பல ஆண்டுகளுக்கு செவ்வனே தனது பணிகளை இந்த இயக்கம் நிச்சயம் ஆற்றிவரும் ,இந்த இயக்கத்தோடு இணைந்து உங்களையும்,இந்த சமூகத்தையும்,தமிழ் சினிமாவையும் மேம்படுத்தும் பணியில் இட்டு நிரப்பிக் கொள்ளுங்கள்.

Leave Comments

Comments (0)