முதலில் அம்பேத்கர் பிறகு பெரியார் இப்போது புத்தர்!!!

/files/werr-2020-11-05-12:28:02.jpg

முதலில் அம்பேத்கர் பிறகு பெரியார் இப்போது புத்தர்!!!

  • 103
  • 0

-செல்வமணி

இந்திய வரலாற்றை எடுத்துக் கொண்டால் அதை இரண்டாக பிரித்து காட்ட இயலும் ஒன்று சனாதனம் மற்றொன்ரு அதை எதிர்க்கும் சனநாயகம். சனாதனம் என்பதற்கு சரியான விளக்கம் கூட இன்று வரை பொது மக்களை சென்று சேரவில்லை ஆனால் இந்த மண்ணில் நித்தம் நித்தம் நடந்தேறும் அனைத்து வன்கொடுமைகளுக்கும் அடிநாதமாக இருப்பது அதுவே. அதை தகர்க்க யார் முன் வந்தாலும் அவர்கள் மீது அவதூறு பரப்புவதே பார்பனியத்தின் வேளை அதை மிகச் சிறப்பாக செயலாற்றுவது முட்டால் சாதி இந்துக்களின் தலையாய கடமை, அது மட்டும் அல்லாது சனாதனம் என்ற ஒன்றே இப்போது இல்லை எனவும் கூறுவார்கள் இந்த மவுனிகள், அவர்களும் கூட்டு குற்றவாளிகளே. இம் மண்ணில் அரங்கேறும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூலம் சனாதனம் அதனின் மூலம் மனுதர்மம். அதன் கூறுகள் தான் சாதி, மதம், சடங்கு, சம்பிரதாயங்கள் என்னும் புனித குப்பைகள். இவைகளை ஒழித்து கட்டினால் தான் சமத்துவம் சாத்தியம் என்பதை உணர்ந்து இந்த தேசத்தில் முதன் முதலில் அதற்க்கு எதிராக களமாடியவர் புத்தர் அவர்கள் தான் அவர் வழியில் வந்தவர்கள் தான் தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் இப்போது அதை தொடர்பவர் தோழர் திருமா...

நம்முடைய தமிழகத்தில் உள்ள சாதி வெறியர்கள் அம்பேத்கர் சிலையை உடைத்தனர், பெரியார் சிலையை சேதப்படுத்தினர், இருவர் சிலைக்கும் காவி சாயல் பூசினர். அவர்களின் அறியாமை புத்தரையும் விட்டு வைக்க வில்லை. சென்னை பல்லாவரம் புத்தர் விகாரில் உள்ள புத்தர் சிலையை சமூகவிரோதிகள் 1/11/2020 அன்று தாக்கியுள்ளனர்.இந்து வெறிக்கும்பலும் இதுபோன்ற வன்முறையை தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது, அரசும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே இருக்கிறது இது மேலும் அவர்களை ஊக்குவிக்கவே செய்கிறது இவை கடும் கண்டனத்திற்குரியவை உடனடியாக, புத்தர் சிலையை உடைத்தவர்களை கைது செய்ய வேண்டும். இது போன்ற இழிவான நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு தகுந்த தண்டனை விதிக்கப்பட வேண்டும். வெறும் சட்டமும் தண்டனையும் ம‌ட்டுமே எதையும் முழுமையாக மாற்றிடாது. பார்பனியம் என்றால் என்ன? அது இந்த நாட்டை எவ்வாறு சீரழித்தது? அந்த பிற்போக்கு பிணியில் இருந்து மானுடத்தை மீட்க மனித மாண்புடன் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட புத்தர், பெரியார், அம்பேத்கர் இவர்கள் ஆற்றிய களப்பணிகளை வெகுசன மக்கள் மனங்களில் சென்று சேர்த்திட வேண்டும். அதை கலை படைப்பாகவோ, எழுத்தாகவோ, பேச்சாகவோ மனிதத்தை நேசிக்கும் ஒவ்வொரு வரும் எடுத்துரைத்தல் வேண்டும்.

Leave Comments

Comments (0)