32 வயது பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர் கைது

/files/detail1.png

32 வயது பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர் கைது

  • 0
  • 0

கடலூரில் 32 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவரை ஐந்து பேர்க் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

கடலூர் அருகே உள்ள நெய்வேலியைச் சேர்ந்தவர் சக்தி(32). கணவனை இழந்த இவர் மூன்று குழந்தைகளுக்குத் தாய். கடந்த இரு தினங்களுக்கு முன்பு மளிகைக் கடைக்குச் சென்ற சக்தி தனது உறவினர் ஒருவருடன் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பாதி வழியில் வாகனம் பழுதடைந்தது. இதனால் சக்தியைச் சாலையின் ஓரம் இறக்கிவிட்டு வாகனத்தைச் சரி செய்யச் சென்றார் அந்த  உறவினர். சக்தி தனியாக நின்றுகொண்டிருப்பதைப் பார்த்த 5 பேர்க் கொண்ட கும்பல் அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்தது. அந்த நேரத்தில் வண்டியைச் சரிசெய்துவிட்டு வந்த உறவினர் அவர்களிடமிருந்து சக்தியைக் காப்பற்ற முயற்சி செய்தார். ஆனால் அந்த கும்பல் அவரையும் அடித்து அங்கிருந்து விரட்டியுள்ளது. மேலும் அப்போது ஏற்பட்ட சண்டையில் 5 பேரில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். மீதமுள்ள 4 பேர் சக்தியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு இறந்த தங்களது கூட்டாளியையும் விட்டுவிட்டுத் தப்பித்துச் சென்றுள்ளனர்.

சில மணி நேரத்திற்குப் பிறகு மயக்க நிலையிலிருந்து எழுந்த சக்தி காவல் நிலையத்திற்குச் சென்று நடந்ததைக் கூறினார். தற்போது சக்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது கார்த்திக் (24), சதிஷ்குமார் (23), ராஜதுரை (25), சிவபாலன்(22) உயிரிழந்தது பிரகாஷ் (26) என்பது தெரியவந்தது. ஐந்து பேரும் தினக்கூலிகள். அவர்களைக் கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Leave Comments

Comments (0)