ஐஐடியில் நான்கு ஆண்டுகளில் 27 பேர் தற்கொலை

/files/detail1.png

ஐஐடியில் நான்கு ஆண்டுகளில் 27 பேர் தற்கொலை

  • 0
  • 0

 

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை சென்னை ஐஐடியில் ஏழு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக  தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஐஐடியில் சமூகவியல் துறையில் முதலாமாண்டு படித்து வந்தவர் முதுகலை மாணவி பாத்திமா லத்தீப். கேரள மாநிலம் கொள்ளத்தைச் சேர்ந்த இவர் கடந்த நவம்பர் 9ஆம் தேதி ஐஐடியில் உள்ள பெண்கள் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பாத்திமா இறப்பதற்கு முன்னர் தனது செல்போனில் ஒரு செய்தியைப் பதிவு செய்துள்ளார். அதில், ”சென்னை ஐஐடி பேராசிரியர் சுதர்சன பத்மநாபன் உள்ளிட்ட மூன்று  பேர் தன்னை மத ரீதியாகத் துன்புறுத்தி மன உலைச்சல் ஏற்படுத்தினர்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் நாட்டில் நிலவிவரும் மத வெறுப்பின் காரணமாக தமது மகள் உயிரிழந்திருக்கிறாள் என பாத்திமாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். பாத்திமாவின் உயிரிழப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாத்திமாவின் உயிரிழப்பிற்குக் காரணமானவர்களைக் கைது செய்ய கோரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் நடந்திருக்கும் தற்கொலைகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதில்,  கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 27 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் அதிலும் சென்னை ஐஐடிதான் முதலிடம் வகிக்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை சென்னை ஐஐடியில் ஏழு மாணவர்கள் தற்கொலைகள் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காரக்பூரில் 5 பேரும், டெல்லி மற்றும் ஹைதராபாத்தில் தலா 3 பேரும், மும்பை, கவுகாத்தியில்  2 பேரும் தற்கொலை செய்துள்ளனர். 

Leave Comments

Comments (0)