உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 20 ஈழத்தமிழர்கள் தற்கொலை முயற்சி

/files/detail1.png

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 20 ஈழத்தமிழர்கள் தற்கொலை முயற்சி

  • 0
  • 0

 

திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 46 ஈழத்தமிழர்களில் 20 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.

திருச்சி மத்தியச் சிறை வளாகத்திற்குள் அமைந்துள்ள சிறப்பு முகாமில் ஈழத் தமிழர்கள் 71 பேர் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் மீது எந்த வழக்கும் இல்லை. வழக்குகள் அனைத்தும் ஏற்கனவே முடிந்துவிட்டது. ஆனால் அவர்கள் விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்து முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் “விடுதலை அல்லது சாவு” என்ற முழக்கத்தை முன்வைத்து நேற்றிலிருந்து 46 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அரசு அவர்களை கண்டுகொள்ளாத நிலையில் அதில் 19 பேர் விசம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அவர்கள் விசம் அருந்திப் பல மணி நேரம் ஆகியும் அவர்களை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லாமல் சிறப்பு முகாமிலே அடைத்துவைத்துள்ளனர். தமிழக அரசு உடனடியாக இந்த பிரச்னையில் தலையிட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து அவர்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

Leave Comments

Comments (0)