மியான்மர் நிலச்சரிவில் 20 பேர் பலி - அகதிகள் முகாமும் பாதிப்பு

/files/detail1.png

மியான்மர் நிலச்சரிவில் 20 பேர் பலி - அகதிகள் முகாமும் பாதிப்பு

  • 0
  • 0

-வித்யா

மியான்மர் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நேற்றுவரை 20 பேர் பலியானதாக செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவரும் நிலையில், அதன் நீட்சியாக தற்போது நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.

இதில் சிக்கி 20 பேர் வரை உயிரிழந்திருப்பதாகவும், இன்னும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை சீற்றம் ஏற்பட்டிருக்கும் ஹபாகாண்ட் பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால், அங்கு தொடர்ந்து அவ்வப்போது மழையும் பொழிந்து வருவதால் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீண்டும் விபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது.

இதேபோல் ரோஹிங்யா இசுலாமிய அகதிகள் முகாமும் நிலச்சரிவில் சிக்கியிருக்கிறது. இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

\r\n

Leave Comments

Comments (0)