தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து 17 தலித் மக்கள் உயிரிழப்பு

/files/detail1.png

தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து 17 தலித் மக்கள் உயிரிழப்பு

  • 1
  • 0

 

மேட்டுப்பாளையத்தில் இன்று (டிசம்பர் 02) அதிகாலை 5.30 மணிக்குத் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்ததில் 17 தலித் மக்கள் உயிரிழந்துள்ள சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் அருகில் உள்ளது நடூர். இந்த கிராமத்தில் சக்ரவர்த்தி துகில் மாளிகை என்னும் பெயரில் துணிக்கடை உரிமையாளருக்குச் சொந்தமான வீடுகள் உள்ளது. ஆணவ சாதியைச் சேர்ந்த இவர், இவருடைய வீட்டைச் சுற்றியும் ஆணவ சாதி மக்களையும் தலித் மக்களையும் இரண்டாகப் பிரிக்கும் வகையிலும் 20 அடி சுவரைக் கட்டியுள்ளார்.

கருங்கல்லால் கட்டப்பட்ட அந்த சுவர் பராமரிப்பின்மை காரணமாக இன்று காலை பெய்த மழையில் அதிகாலை 5.30 மணிக்குத் தலித் மக்கள் குடியிருப்பின் மீது இடிந்து விழுந்துள்ளது. இதில் மூன்று வீடுகள் முழுமையாக நசுங்கி அதிலிருந்த பெண்கள் உட்பட 17 பேரும் உடல் சிதைந்து இறந்துள்ளனர். 17 பேரில் இரண்டு பேர் குழந்தைகள்.

தீண்டாமை சுவரால் இன்று  17  தலித் மக்களை ஆணவ சாதி வெறி கொலை செய்திருக்கிறது. இறந்தவர்களின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தீண்டாமை சுவரை அகற்றக்கோரி பலமுறை தலித் மக்கள் மனு அளித்துள்ளனர். மேலும் அந்த வேலியை அமைத்தவரிடமே முறையிட்டிருக்கின்றனர். ஆனால் நாய்களை விட்டு தலித் மக்களை கடிக்கச்சொல்லும் வேலையைச் செய்துவந்திருக்கிறார்.

இந்த சம்பவத்திற்கு நீதி விசாரணை வேண்டுமென்றும், இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.  17 பேர் உயிரிழக்க காரணமான தீண்டாமை சுவர் கட்டிய வீட்டின் உரிமையாளர் சக்ரவர்த்தி மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.


 

Leave Comments

Comments (0)