மின்னலுடன் பெருமழை: 13 பேர் பலி!

/files/detail1.png

மின்னலுடன் பெருமழை: 13 பேர் பலி!

  • 0
  • 0

\r\n
\r\n

-வித்யா

மின்னலுடன் பெருமழை: 13 பேர் பலி!

மேற்கு வங்காளத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பெருமழை பெய்ததில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே மேற்கு வங்காளத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்துவருகிறது. வானிலை மையம் முன்னெச்சரிக்கை அறிவித்தும்அப்பகுதி மக்கள் வழக்கம் போல் வயல் வேலைக்குச் சென்றுள்ளனர். இதனால்நாடியாமுர்ஷிதாபாத்,  பர்கானாஸ் மாவட்டங்களில் நேற்றிரவு (ஏப்ரல் 29) மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்தனர். தக்‌ஷின் தினஜ்பூர் மற்றும் மால்டா ஆகிய  மாவட்டங்களில் மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும் புர்லியா மாவட்டத்தில் மின்னல் தாக்கி காயமடைந்த 4 பேரில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

வெப்பசலனம் மற்றும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.  சென்னையைப் பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் கத்திரி வெயில் வருகிற மே 4 ஆம் தேதி தொடங்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தும் பல பகுதிகளில் வெயில் வெளுத்து வாங்குகிறது. வானிலை மையம் அறிவித்தபடி மழை பெய்யாதா என மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 

\r\n
\r\n
\r\n

Leave Comments

Comments (0)